WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 18, 2021

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?

இந்நிலையில், இந்த கல்வியாண்டு, இன்னும் மூன்று மாதங்களில் முடிய உள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு நாள் கூட, பள்ளிக்கு வராததால், அவர்களுக்கு குறைந்தபட்சம், இரண்டு மாதங்களாவது, நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில், தங்கள் வகுப்பையும், ஆசிரியர்களையும், நேரில் பார்க்க முடியாத நிலை உள்ளதால், உளவியல் ரீதியாக, மாணவர்கள் உற்சாகமின்றி உள்ளனர். அவர்களை நேரடி வகுப்பில் ஈடுபடுத்துவதால் மட்டுமே, கற்றலில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கல்வியாண்டு, இன்னும் மூன்று மாதங்களில் முடிய உள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு நாள் கூட, பள்ளிக்கு வராததால், அவர்களுக்கு குறைந்தபட்சம், இரண்டு மாதங்களாவது, நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில், தங்கள் வகுப்பையும், ஆசிரியர்களையும், நேரில் பார்க்க முடியாத நிலை உள்ளதால், உளவியல் ரீதியாக, மாணவர்கள் உற்சாகமின்றி உள்ளனர். அவர்களை நேரடி வகுப்பில் ஈடுபடுத்துவதால் மட்டுமே, கற்றலில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஏப்ரல் அல்லது மே மாதத்துக்கு பின், கோடை விடுமுறை வருவதால், அதற்கு முன், மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைத்து விட வேண்டும் என, ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை தரப்பில், கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே, அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் அமர வைக்க முடியும்:இல்லையென்றால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால், சுகாதாரத் துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின், முதல்வரின் அனுமதியுடன், பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு எப்போது?



'பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஜூனில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 3 முதல், 21 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. அதனால், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2வை பொறுத்தவரை பலர், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு, மே மாதத்துக்குள் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, ஜூனில் தேர்வு நடத்தப்படலாம் என, தெரிகிறது. இந்த ஆண்டு தாமதமாக பாடங்கள் நடத்தியுள்ளதால், கல்வி ஆண்டை, ஜூன் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு ஜூனில் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி முடிவாகி விட்டால், மே இறுதி வாரத்தில் தேர்வு துவங்கப்பட்டு, ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.