'தேசிய அளவில் நடக்கும், 'பசு அறிவியல்' தேர்வில் பங்கேற்க, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்' என, அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கும், யு.ஜி.சி., எனப்படும், மத்திய பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.மத்திய அரசு, 2019ல், பசுவின் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்' என்ற ஆணையத்தை ஏற்படுத்தியது. இந்த ஆணையம், வரும், 25ம் தேதி, நாடு முழுதும் 'ஆன்லைன்' வாயிலாக, பசு அறிவியல் தேர்வு நடத்த உள்ளது. இது குறித்து, பல்கலை மானியக் குழு செயலர் ரஜனிஷ் ஜெய்ன் கூறியதாவது: அறிவியல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், வேளாண், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு, பசு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. பால் சுரப்பு நின்ற பிறகும், பல வகைகளில் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
பசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆன்லைன் வாயிலாக, 25ம் தேதி, பசு அறிவியல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். பொதுமக்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட, 11 மொழிகளில் தேர்வு நடக்கும். இந்த தேர்வில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்கும்படியும், ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யும்படியும், அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.