பள்ளி கல்வித்துறையில், 26 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பணியிடங்கள், 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.
இதன்படி, 26 காலியிடங்களில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வி செயலர் தீரஜ்குமார் பிறப்பித்தார். பணி நியமன உத்தரவை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார். உத்தரவு பெற்றவர்கள், இன்றே பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.