தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் தாக்கல் செய்த மனு:
பிப்ரவரி 18 -ஆம் தேதி தொடக்கக்கல்வி இயக்குநர் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிப்ரவரி 27 மற்றும் 28 -ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வும் பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்தாமல், பதவி உயர்வால் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதனால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. ஆகவே, தொடக்க கல்வி நிலையில் பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்து விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.