தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆல்பாஸ் அறிவிக்கப்பட்ட 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்களும் கோரி வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. பின்னர் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தி கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே 3 முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 9, 10, 11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று தஞ்சாவூர் பாபநாசம் அம்மாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்திலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.