Saturday, May 14, 2022
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை உதாசீனப்படுத்தி அதிகாரிகளின் தவறினை மறைக்கும்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வேதியியல் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஆறு மதிப்பெண்கள் 11 நபர்களுக்கு மட்டும் வழங்கி பணி நியமனம் செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம் .ஆனால் இது சம்பந்தமாக 19.9. 2019 REV.APLW.(MD)No.153/2019. அன்று வே. தரணி என்பவரின் மறுசீராய்வு மனுவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கி மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டுபணி ஆணை வழங்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் 26469 என்ற எண்ணில் சிறப்பு விடுப்பு மனு பதிவு செய்தது இதற்கான விசாரணை 29.04.2022 அன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஐந்து வருடங்களாக சட்டப் போராட்டத்தினை நடத்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. *வே.தரணி-9786504072* ( *2017ல் வெளியிடப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர் பணிக்கான தெரிவுப் பட்டியலில் ஒரு சிலருக்கு குறிப்பாக வழக்கு தொடர்ந்தவர் களுக்கு மட்டுமே மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பொழுது சரியான விடை அளித்து இருந்தும் வழக்கு தொடுக்க காரணத்தினால் நீதிமன்ற தீர்ப்பில் சரியான பதில் அளித்திருந்த ஒருசில பெயர்கள் இடம்பெறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில் யார் யாருக்கெல்லாம் மதிப்பெண் கிடைக்குமோ அவர்களின் பெயரை சேர்த்து பட்டியல் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.* ஆனால் இந்த தீர்ப்பினை காட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பாதிக்கப்பட்ட நபர் கேட்டதற்கு நீங்கள் எப்போ வேண்டுமானாலும் வருவீங்க. அப்போதெல்லாம் உங்களுக்காக எல்லாம் போஸ்டிங் போட முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவறான விடை எழுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வுப் பணி பெற்று நான்கு ஆண்டுகளாக சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் சரியான விடை எழுதியும் மதிப்பெண் வழங்காத தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் தமிழகத்தில் ஏராளமான தேர்வர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஏற்கனவே பாலிடெக்னிக் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஊழல்வாதிகளை தமிழக அரசு ஏன் பணியமர்த்தி உள்ளது என தெரியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.