WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 4, 2022

இல்லம் தேடி கல்வி ஆய்வு செய்ய உத்தரவு.

'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பயிலும் மாணவ - மாணவியரின் கற்றல் திறன் குறித்து பதிவு செய்ய, தன்னார்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 3 முதல், இல்லம் தேடி கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில், தன்னார்வர்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், மாணவ, மாணிவியரின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஐ.டி.கே., எனும் மொபைல் போன் செயலியில், அனைத்து பாடங்களிலும் மாணவர்களின் கற்றல் நிலையை பதிவு செய்யும் படி, தன்னார்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், வரும் 6க்குள் அனைத்து மையங்களிலும் இந்த ஆய்வை செய்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.