WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 4, 2022

போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்; எதிர்காலம் கேள்விக்குறி.

மதுரை நகரில் பள்ளி மாணவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர் பல்வகை போதைகளுக்கு அடிமையாகி உள்ளனர். பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட் போன்றவற்றை நுகர்ந்து நாளடைவில் அந்த வாசனைக்கு அடிமையாகி விடுகின்றனர். இதுஒரு வகையான போதை என்கின்றனர் போலீசார். அதுபோல் குட்கா, பான்பராக், பாக்கு போன்ற புகையிலை பொருட்களை வாய்க்குள் கன்னத்தின் ஓரத்திலும், நாக்கிற்கு அடியிலும் வைத்து போதை ஏற்றி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தை மறைவிடமாக கொண்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிலர் போதை வஸ்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ போலீசாரின் பார்வைக்கு வந்துள்ளது.





போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்து போதையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து 'கவுன்சிலிங்' அளிக்க உள்ளோம். வீட்டிலும், பள்ளியிலும் தொடர்ந்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த உள்ளோம்'' என்றார்.

சில நாட்களுக்கு முன் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் மோதிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பள்ளி மாணவர்கள் சர்ச்சையில் சிக்குவது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.