WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 22, 2023

CUET PG 2023 : கியூட் முதுகலை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியது! எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

 ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் தேசிய தேர்வு முகமையால் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி கல்வி நிலையங்களில் முதுகலை பட்டபடிப்புகளில் கல்வி பயில்வதற்கான நுழைவு தேர்வான CUET(PG) Common University Entrance Exam நடத்தப்பட்டு வருகிறது. 2023க்கான கியூட் முதுகலை தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

CUET(PG) 2023 விண்ணப்ப பதிவு!

2023 ஆண்டுக்கான CUET(PG) விண்ணப்ப பதிவு 20.3.2023 முதல் துவங்கி 19.04.2023 வரை தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை திருத்திக்கொள்வதற்கான அவகாசம் 20.04.2023 முதல் 23.04.2023 வரை கொடுக்கப்படும்.

CUET(PG) 2023 தேர்வு தேதி!

2023 ஆண்டுக்கான CUET(PG) தேர்வு தேதி மற்றும் தேர்வு மைய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று NTA அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUET(PG) 2023 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

STEP 1 : தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

STEP 2 : முகப்பு பக்கத்தில் உள்ள Inviting Online Applications for Common University Entrance Test [CUET (PG) – 2023] என்ற லின்க்கை கிளிக் செய்யவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு திறக்கும்.
STEP 3 : அறிவிப்பை படித்த பிறகு முகப்பு பக்கத்தில் காணப்படும் Registration for CUET(PG)-2023 என்ற லின்கை கிளிக் செய்யவும். New Registration என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிட்டு உங்களுக்கான விண்ணப்ப எண், பாஸ்வோர்ட் ஆகியவற்றை உருவாக்கி கொள்ளவும்.
STEP 4 : பின்னர் அந்த பதிவு விவரங்களை கொண்டு லாகின் செய்து விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்யவும்.
STEP 5 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு விண்ணப்பத்தை சப்மிட் கொடுக்கவும்.

STEP 6 : பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எதிர்கால தேவைகளுக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப்பிரிவு மாணவர்கள் 1000 ரூபாயும், Gen-EWS, OBC-NCL 800 ரூபாயும், SC/ ST மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 750 ரூபாயும், PwD பிரிவை சேர்ந்தவர்கள் 700 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணத்திற்கு மூன்று பேப்பர்கள் மட்டுமே எழுத முடியும். அதற்கும் மேல் எழுத விரும்புபவர்கள் அதற்கான கூடுதல் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அந்த பேப்பர்களுக்கும் சேர்த்து விண்ணப்பித்து கொள்ளலாம்.



அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.