WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 21, 2023

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 20 ஆயிரம் ஊதியத்தினை 25 ஆயிரமாக ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் வரவேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பு ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியமத்தப்பட்டுள்ளனர். முதல் சுழற்சியில் 5699 நபர்களும் இரண்டாம் சுழற்சியில் 1661 நபர்களும் ஆக மொத்தம் 7350 நபர்கள் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். 

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியமாக இருபதாயிரம் வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழ்நிலையில் இன்று 21.7.2023 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான சந்திப்பு கூட்டத்தின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில்  மனமார்ந்த நன்றிகளை மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு உயர் கல்வித் துறை செயலாளார் அவர்களுக்கும் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர்  அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் தங்கராஜ் அளித்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு தற்போது உள்ள விலைவாசி உயர்வினை சற்று சமாளிக்கும் வகையில் இருக்கும். அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் சற்று குறைவான ஊதியம் தான். ஆயினும் 2010ல் ஆறாவது ஊதிய குழுவின் படி யுஜிசி பரிந்துரைத்த சம்பளமான 25000 ரூபாயினை வழங்க 13 ஆண்டுகளுக்கு பிறகு  தமிழக உயர்கல்வித்துறை முன் வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. எனவே தமிழக அரசின் நிதி நிலைமை சரியான உடன் யுஜிசி ஏழாவது ஊதிய குழுவின் படி 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட பரிந்துரையில் குறிப்பிட்டவாறு உரிய யுஜிசி  தகுதி உடன் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 50000 ரூபாய் மாத சம்பளத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக பணியாற்று வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை வழங்கிட வேண்டும். அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் நடைபெறாததால் பெரும்பாலான கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தர பேராசிரியராக ஆக வாய்ப்பில்லாததால் கௌரவ விரிவுரையாளராகவே கடந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி ஓய்வு அடைந்து விட்டனர். இதில் சிவகங்கை மகளிர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஆங்கிலத் துறை பெண் கௌரவ விரிவுரையாளரும் மாற்றுத்திறனாளியுமான  முனைவர் சாந்தி அவர்கள் 60 வயது பூர்த்தியானதால் கல்லூரி நிர்வாகம் பணிபுரிய அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாக தமிழக உயர்கல்வி துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்தும் பலன் அளிக்காமல் கௌரவ விரிவுரையாளராகவே பணி ஓய்வடைந்து விட்டார். அவரைப் போன்ற பெரும்பாலான கௌரவ விரிவுரையாளர்கள் பணி ஓய்வினையும் கடந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் அரசு கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் வேலையை கொரோனா காலகட்டத்தில் செய்ய பணித்ததாலும் 15க்கும் மேற்பட்ட  கௌரவ விரிவுரையாளர்கள் மரணமடைந்துள்ளனர். திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உட்பட்ட நான்கு கல்லூரிகளில் பணியாற்றி வந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்ட திருப்பத்தூர் அரக்கோணம் திட்டக்குடி கள்ளக்குறிச்சி ஆகிய கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அதேபோன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரத்தநாடு வேதாரண்யம் போன்ற 10 கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களுக்கும் இன்னும் கொரோனா பேரிடர் காலத்தில் வழங்க வேண்டிய ஆறு மாத ஊதியத்தினை வழங்காமல் தமிழக உயர்கல்வித்துறை காலம் தாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்மொழி அவர்களின் தலைப்பின் பேரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் தென்னாங்கூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பல்கலைக்கழக விரிவாக்க கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய   ஊதியம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரிகளில்   தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 2019-ல் யுஜிசி பரிந்துரைத்த வழிகாட்டுதல் நெறிமுறைப்படி  65 வயது வரை கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணியாற்ற அனுமதி தர வேண்டும்.  ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் நீண்ட தூரம் பயணித்து பணியாற்றி வருகிறார்கள். ஸ்டாலின் ஐயா அவர்களின் தலைமையிலான அரசு முதல்முறையாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் அவ்வாறு பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் வருகின்ற கௌரவ விரிவுரையாளர்களின் கடந்த கால அரசு கல்லூரி பணி அனுபவம் கணக்கில் கொள்ளாமல் ( overall Guest Lecturer service seniority) புதிதாக சேர்கின்ற கல்லூரிகளில்  பணியாற்றும் பணி அனுபவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. அதாவது station seniority மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால் புதிய அரசு கொண்டு வந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறை வரவேற்பைப் பெறவில்லை. எனவே கௌரவ விரிவுரையாளர்கள் பணி மாறுதல் மூலமாக வந்தாலும், நடுவிலே மகப்பேறு  அண்ணாமலை மிக பேராசிரியர் பணி நிரவல் போன்ற காரணங்களால் பணி வாய்ப்பினை இழந்த கௌரவ விரிவுரையாளர்களின் கடந்த கால அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய பணி அனுபவங்களையும் கணக்கில் கொள்ளும் வகையில் தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலம் பணியாற்றி விட்டு பணி ஓய்வு நெருங்குகின்ற வயதில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின்  ஆசைகள் எல்லாம் யுஜிசி பரிந்துரைத்த சம்பளத்தை தான் 14 ஆண்டுகளாக  தமிழ்நாட்டினை மாறி மாறி ஆண்ட அரசுகள்  வழங்க முன் வரவில்லை. குறைந்தது  யு ஜி சி வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளவாறு கௌரவ விரிவுரையாளர்களின் பணி ஓய்வு வயதை 65 வயதாக உயர்த்த வேண்டும் எனவும்,  மேலும் உரிய கல்வி தகுதிகள் இருந்தும் பணி நியமனம் நடைபெறாத காரணத்தினால் பணி ஓய்வு அடைந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றும் பணிக்காலத்தில் மரணமடைகின்ற கௌரவ விரிவுரையாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களையும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர்களையும் உயர் கல்வித் துறை அதிகாரிகளையும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவாக சங்கத்தின் சார்பில்  கேட்டுக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.