WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 12, 2023

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா.


            நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,அவர்கள், நீட் தேர்வில் வென்றவர்களை பாராட்டியதுடன், சாதனையாளர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள மகத்தான பங்களிப்பை வாழ்த்தினார். 
இன்று (12.08.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களது                       மன உறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றால் எதையும் சாதிக்கும் திறமையும், திறனும் தங்களுக்கு இருப்பதை நிரூபித்துள்ளனர் என்று கூறினார். "இன்றைய உலகம் போட்டி நிறைந்தது. அதில் வெறும் பட்டங்களைப் பெறுவது மட்டும் போதாது. நமது இளைஞர்கள் போட்டியிட வேண்டும். அப்போது தான் சிறந்தவர்கள் வெளிப்படுவார்கள். நமது மாநிலத்தில், ஏதோ அறிவுக்குறைபாடுள்ளது  போல, “நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது” என்ற போலியான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நியாயமற்றது. இன்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றவர் நமது மாநிலத்தைச் சேர்ந்தவர். இது நமக்கெல்லாம் பெருமை மட்டுமின்றி நீட் தேர்வு பற்றிய கட்டுக்கதையை போக்கியுள்ளது. நமது இளம் மாணவர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்.
கடைகோடி நபருக்கும் சுகாதார வசதிகள்
வலிமையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆரோக்கியமே முதன்மையான தேவை. இந்தியாவின் சுகாதார சேவைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்று, சுகாதார வசதிகள் மிகவும் அணுகக்கூடியதாகவும் கடைகோடி நபருக்கும் உகந்ததாகவும் உள்ளன. கடந்த 7-8 ஆண்டுகளில், யுஜி மருத்துவ இடங்கள் இரட்டிப்பாகியுள்ளன. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 
கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. இது நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊக்கத்தை அளித்துள்ளது.
மேலும், நீட் தேர்வின் மூலம் நமது மாணவர்கள் 'சிறந்தவர்கள்' என்பதை நிரூபித்துள்ளனர் என்று கூறிய ஆளுநர், அந்த மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உருப்பெறுவது அவர்களுக்கான அடுத்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார். 
  இன்று, ‘இந்தியா’ லட்சியம் மிகுந்த நாடாக உள்ளது. இன்று உலகமே இந்தியாவை மரியாதையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பார்க்கிறது. உலகின் சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பது அந்த எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும். நமது மருத்துவர்கள், அவர்களின் தொழில்முறை அறிவு மற்றும் பராமரிப்பு குணத்துடன் ‘சிறந்த மருத்துவர்கள்’ என்பதை நிரூபித்துள்ளனர் என்று ஆளுநர் கூறினார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை
இந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு தவறாமல் சென்று அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். தங்களுடைய அனுபவங்களும் வெற்றிக் கதைகளும் ஆர்வமுள்ள இளம் சமூகத்துக்கு உத்வேகமாக இருக்கும் என்று ஆளுநர் குறிப்பிட்டார். 
நீட் மசோதா: பெற்றோரின் கேள்விகளுக்கு ஆளுநர் விளக்கம்
நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு ஆளுநர், இந்த மசோதா மாண்புமிகு குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ஒத்திசைவு பட்டியல் விவகாரமாக இருப்பதாலும், மாண்புமிகு குடியரசு தலைவரே அதன் மீதான முடிவை எடுக்கக் கூடியவராகவும் இருப்பதாக தெரிவித்தார். அதே சமயம், தாமாக இருந்தால் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனக் கூறிய அவர், அறிவில் பிரகாசமான நமது குழந்தைகள் அறிவுசார் குறைபாடு கொண்டவர்களாக உணர்வதை நான் விரும்பவில்லை என்றும் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் தேர்வை எழுதி சிறந்தவர்களாக அவர்கள் விளங்க வேண்டும் என்று விரும்புவதாகவும்  தெரிவித்தார்.
நீட் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அவசியமா? 
“நீட் தேர்வுக்கு பயிற்சி தேவை” என்பது ஒரு கட்டுக்கதை. எந்த பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் உள்ளனர். ஏனென்றால் பள்ளியில் அவர்களின் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு நன்றாக கற்பித்துள்ளனர். கற்பித்தல் தரம் குறைவாக இருக்குமானால், தேர்வுகளை குறை கூறக் கூடாது. அதற்குத் தீர்வாக அந்த கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
“நீட் இல்லாத போது நாங்கள் நன்றாக விளங்கினோம்” என்ற தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே இருந்தது. 2016–17ல்,  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த எண்ணிக்கை குறைந்தது. பின்னர் 7.5% இடஒதுக்கீடுக்கான அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன் மூலம் நலிந்த பிரிவைச் சேர்ந்த அரசு பள்ளிகளின் தகுதியான மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வாய்ப்பு அமைந்தது. இந்த காரணங்களால் அந்த எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. 
நீட் தேர்வுக்கு முன், இது மிகவும் வணிகமயமாக்கப்பட்டது. அதை வலுவான மற்றும் சக்திவாய்ந்த கூட்டம் கட்டுப்படுத்தியது. இந்த கூட்டம் தான், அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று கூச்சலிட்டு மக்களை தவறாக வழிநடத்தியது. முந்தைய ஆண்டுகளில் இத்தகைய தற்கொலை செய்திகள் பற்றி நான் கேள்விப்படவில்லை. இதற்கு முன், அசம்பாவிதம் நடந்தபோதெல்லாம், நீட் தேர்வுடன் அந்த மரணம் இணைக்கப்பட்டது. அந்த கூட்டம், தங்கள் சொந்த நலன்களுக்காக அப்பாவி மாணவர்களின் தற்கொலையை கொச்சைப்படுத்தியது. நீட் தேர்வு அறிமுகத்தால், மருத்துவ படிப்புகளில் சேர வழங்கப்பட்டு வந்த ஊழல் குறைந்துள்ளது. நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்கள் நல்ல மருத்துவ கல்லூரியில் சேர முடியும். நீட் தேர்வுக்கு முன்பு முழுக்க முழுக்க ஊழல் மலிந்திருந்தது. இந்தப் பொய்ப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நமது மாணவர்கள்தான். அரசு பள்ளிகளில் இருந்து வரும் ஏழை மற்றும் சிறந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு முறை நீதி வழங்கியுள்ளது என்று ஆளுநர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்களை பெற்றோர்கள் தவறாக வழிநடத்தாமல் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒருவர் தெரிவித்தார்.
தேர்வில் வெற்றி பெற யோசனை
தெளிவு, தன்னடக்கத்துடன் கூடிய கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்று மாண்புமிகு ஆளுநர் தெரிவித்தார். உங்களின் உண்மையான திறனை நீட் உட்பட எந்த தேர்வாலும் வரையறுக்க முடியாது. நீட் தேர்வில் தோல்வியுற்றவர்கள், "நான் எங்கே தவறவிட்டேன்? என இதயசுத்தியுடன் சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனது நேரத்தை திறமையாக நிர்வகித்தானா? ஒருவேளை எவ்வாறான சந்தர்ப்பத்திலோ நீங்கள் தேர்வில் தவறியிருந்தால், நீங்கள் சிறந்து விளங்க மேலும் துறைகள் உள்ளன. உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், நீங்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கலாம் என்று ஆளுநர் கூறினார். 

ஆளுநர் மாளிகை, சென்னை-22        வெளியீடு :-
நாள் : 12.08.2023          மக்கள் தொடர்பு அலுவலகம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.