WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 23, 2023

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் – அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காலை உணவு திட்டம்

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் இருப்பது தவிர்க்கப்படும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் வரும் கல்வியாண்டில் 31008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்களுக்கு இந்த திட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.