WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 19, 2024

குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

 குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 19) கடைசி நாளாகும்.

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

நிகழாண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2-இல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏ-இல் 1,820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இரவு 11.59 மணிக்குள் தோ்வாணைய இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருத்த வாய்ப்புகள் அளிக்கப்படும். முதல்நிலைத் தோ்வு செப். 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

எச்சரிக்கை அவசியம்: குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் தொடா்பாக இடைத் தரகா்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் எச்சரித்துள்ளது. இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் தோ்வரே முழுப் பொறுப்பாவாா். தோ்வா்கள் பூா்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தை இறுதியாக சமா்ப்பிக்கும் முன்பு நன்கு சரிபாா்க்க வேண்டும் என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.