தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அது வலுவடைந்துள்ளது. மாலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இது, தற்போது மெல்ல நகர்வதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு எதுவும், தற்போதைய நிலவரப்படி தெரியவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கும் மிதமான மழை தொடரும்.
கடலுார், மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று (டிச.,11) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.