WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 21, 2025

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

 திருவண்ணாமலையை சேர்ந்த, அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ராதிகா, பல்கலை மானிய குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தங்களுக்கு மதிப்பூதியமாக, மாதம் 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; மே மாதம் உட்பட 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கியது.

அதன் அடிப்படையில், ராதிகாவுக்கு கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி அனுப்பி உள்ள கடிதம்:

தமிழக உயர்கல்வி துறை அரசாணைப்படி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம், 20,000 ரூபாயாக இருந்த மதிப்பூதியம், 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் பணி நியமனம், சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்களால் வழங்கப்படுகிறது.

பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு மே மாதத்திற்கும் சேர்த்து, 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.