பொறியியல் படிப்பில் ஒரே மாதிரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இருக்கும் சூழ்நிலையில் யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண் (Random Number). ஒரே விதமான கட்-ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதுபோன்ற சூழ்நிலையில் இரண்டு பேருக்கும் ரேங்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும்.
அதிலும் ஒன்றாக இருந்தால் அதையடுத்து நான்காவது விருப்பப் பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் இருவரது பிறந்த தேதியைப் பார்ப்பார் கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் பத்து இலக்க எண்ணாகும்.
குலுக்கல் முறையைப் போன்று கம்ப்யூட்டர் மூலம் இந்த எண் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில் கூடுதலான எண் வரும் மாணவர்கள் ரேங்க் அடிப்படையில் முன்னுரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவர். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் கவுன்சலிங்கிற்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுபோலதான் மற்ற தொழிற் பாடப் படிப்புகளுக்கும் ரேண்டம் எண் உருவாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.