“அரசு கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் அறிவியலை அறிந்து கொள்ளும் வகையில், 'அறிவியல் அணுகல் கூடம்' ஒன்றை, கோட்டூர்புரம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் புதிதாக நிறுவி உள்ளது.
இந்த மையத்தை, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
அதன்பின் அமைச்சர் கோவி.செழியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசு கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.