தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அச்சிடப்பட்ட தரநிலை அறிக்கையை பிரித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் அறிக்கையை பெற்றோர்கள் கருத்து எழுதவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள்
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கக்கல்வி மாணவர்கள் அவர்களின் அடிப்படை கற்றலை கற்க முடியாத நிலை எழுந்தது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கிராமபுறங்கள், இணைய சேவை, தொலைக்காட்சி சேவை ஆகியவற்றை பெறாத மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்ல வேண்டிய சூழல் உருவானது. இதனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான்
எண்ணும் எழுத்தும் திட்டம்.2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் முதலில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல், எழுத்துதல் மற்றும் கணக்கிடுதல் ஆகியவை சுவாரஸ்ய முறையில் கற்பிக்கப்பட்டன. தொடர்ந்து 5-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும், எண்ணறிவு திறனும் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருந்தது.
தரநிலை அறிக்கை
அதன்படி, இத்திட்டத்தில் மாணவர்களின் செயல்திறன்களை வகுப்பாசிரியர்கள் குறிப்பிடும் வகையில் தரநிலை அறிக்கை (Holistic Report Card . HRC) உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள் செயல்திறனுக்கு ஏற்ப மதிப்பீடு வழங்கப்படுவதுடன் கருத்துகளும் பதிவிடப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் தொடக்கக்கல்வியில் மூலம் வெளியிடப்பட்டது.
இந்த கல்வி ஆண்டிற்கு தரநிலை அறிக்கை
இந்த கல்வி ஆண்டிற்கான 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள
பள்ளி மாணவர்களுக்கான தரநிலை அறிக்கை அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரநிலை அறிக்கையில் என்னெல்லாம் இருக்கும்?
முதல் பக்கத்தில் மாணவர்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு, அடிப்படை விவரங்கள் நிரப்பப்ப வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் மொத்த வேலை நாட்கள், மாணவர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்த நாட்கள், பாட வாரியாக மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேடு குறிப்பிட வேண்டும். A, B, C என கிரேடு வழங்கப்படும்.
இவைமட்டுமின்றி, மாணவர்களின் மொழி திறன், கல்வி இணை செயல்பாடுகளான விளையாட்டு, குழுப்பணி, படைப்பாற்றல் ஆகியவறை கிரேடு பதிவிட வேண்டும். மேலும் மாணவர்கள் குறித்த ஆசிரியர் குறிப்பு எழுதி, ஒவ்வொரு பருவ இறுதியிலும் பெற்றோர்களின் கையொப்பம் பெற வழங்க வேண்டும்
பெற்றோர்களின் பங்களிப்ப்பு
மாணவர்கள் கல்வியில் மேம்பட்டு, செயல்பாடுகளில் ஈடுபடும் அளவு நிலையை பெற்றோர்கள் அறிந்து, ஆசிரியர்கள் கருத்துகளை படித்து தரநிலை அறிக்கையில் கையொப்பம் ஈடுவது மட்டுமின்றி, பெற்றோர்கள் அவர்களின் கருத்தைத் தெரிவிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தரநிலை அறிக்கையை பெற்றவுடன், பெற்றோர்கள் மாணவர்களுக்கு கருத்துகள் பதிவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் மாணவர்களின் கல்வித் திறனை பெற்றோர்கள் அறிந்துகொள்ளுவதுடன், மாணவர்களுக்கும் ஊக்களிக்கும் விதமாகவும் அமைகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.