WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 12, 2025

டிச.27-ல் உதவி பேராசிரியர் தேர்வு.

 

ஆசிரியர் தேர்வு வாரி​யத் தலை​வர் எஸ்​.ஜெயந்தி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் மற்​றும் அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களுக்​கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்​றும் பிற்​பகல்) நடை​பெற உள்​ளது. இதற்​காக 38 மாவட்​டங்​களி​லும் 195 தேர்வு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

ஹால்டிக்கெட் வெளியீடு: தேர்​வுக்​கான நுழைவுச்​சீட்டு (ஹால்​டிக்​கெட்) தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் (www.trb.tn.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் தங்​களின் யூசர் ஐடி மற்​றும் பாஸ்​வேர்டை பயன்​படுத்தி நுழைவுச்​சீட்​டைப் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

நுழைவுச்​சீட்​டைப் பதி​விறக்​கம் செய்​யும்​போது ஏதேனும் இடர்​பாடு அல்​லது சந்​தேகம் எழுந்​தால் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் குறைதீர்ப்பு மையத்தை தொடர்​பு​கொள்​ளலாம். தேர்வு மையம் மாற்​றம் தொடர்​பான கோரிக்​கைகள் எக்​காரணம் கொண்​டும ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.