WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 11, 2025

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு.

 தமிழக அளவில் டிட்டோ ஜாக் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​களின் அவசரக் கூட்​டம் காணொலி வாயி​லாக நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில், டிட்டோ ஜாக்​கில் அங்​கம் வகிக்​கும் சங்​கங்​களின் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​கள் 11 பேர் கலந்து கொண்​டனர்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டிட்டோ ஜாக்சார்​பில் நாளை வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​து​வ​தால், அதற்​கடுத்த நாள் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்​தப்​படும் உண்​ணா​விரதப் போராட்​டம் பாதிப்​படை​யும்.

மேலும், டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​களில் பலர், ஜாக்டோ ஜியோ​விலும் ஒருங்​கிணைப்​பாளர்​களாக உள்​ளனர். இதனால் ஏற்​ படும் நடை​முறைச் சிக்​கல்​களால் போராட்​டம் தொய்​வடைய வாய்ப்​புள்​ளது என்​ப​தால், டிட்டோ ஜாக் போராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைக்க வேண்​டும் என்று ஜாக்டோ ஜியோ சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இந்​தக் கூட்​டத்​தில் தெரிவிக்​கப்​பட்ட பெரும்​பான்மை உறுப்​பினர்​களின் கருத்​துகள் அடிப்​படை​யில் நாளை நடை​பெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்​தப் போராட்​டம் தற்​காலிக​மாக தள்ளி வைக்​கப்​பட்​டது. ஜாக்டோ ஜியோ போராட்​டத்​துக்​குப் பிறகு டிக்டோ ஜாக்​ போ​ராட்​டம்​ நடத்​தப்​படும்​ என்​றும்​ இக்​கூட்​டத்​தில்​ முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.