பொங்கல் பண்டிகையன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐசிஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனும் பட்டயக் கணக்காளர் பணித்தேர்வு ஆண்டுதோறும் ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு அடிப்படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளாக நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆடிட்டராக முடியும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான சிஏ தேர்வுகள் ஜனவரியில் நடைபெறவுள்ளன.
இதற்கிடையே இடைநிலை தேர்வில் குரூப்-2 பகுதியானது ஜனவரி 15-ம் தேதி நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்பதால், சிஏ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஜனவரி 15-ல் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஏஐ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ``மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 15-ம் தேதி நகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வு, நாடு முழுவதும் ஜனவரி 19-ம் தேதி நடத்தப்படும். தேர்வு நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மற்ற தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐசிஏஐ அறிவிப்பில் பொங்கல் பண்டிகை குறித்த தகவல் இடம்பெறாதது தமிழர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.