'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடை நிலை ஆசிரியர்கள், சென்னையில் 22வது நாளாக நேற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இடையே, ஊதிய முரண்பாடு நீடிக்கிறது. இதை களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து, ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பல்வேறு ஆசிரியர் சங்கங்களை அழைத்து கருத்து கேட்டது. அதன்பின், குழு நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை.
இதனால், அதிருப்தி அடைந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம் பாக்கம் டி.பி.ஐ., வளாகம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், எழும்பூர் காந்தி இர்வின் சாலை, எழிலகம் பகுதிகளில், கடந்த டிச., மாதம் 26ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 22வது நாளாக நேற்றும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி, தங்கள் குழந்தைகளுடன் பேரணியாக வந்த ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்குமாறு கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.