பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (90), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82) எடுக்க வேண்டும்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு, அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ப.சந்திரகன் வெளியிட்டுள்ள அரசாணையில் “டெட் தேர்ச்சி மதிப்பெண் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 50 சதவீதமாகவும் (75) எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (60) நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட டெட் தேர்வுக்கும் இந்த 5 சதவீத மதிப்பெண் குறைப்பு அரசாணை பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.