பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.
அதனால், ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை.
இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய நாளான ஜன.14-ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அன்று விடுமுறை அளித்தால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜன. 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.