ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 கடந்த நவம்பரில் நடைபெற்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஜன.28-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்), எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (60 மதிப்பெண்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும்.
கடந்த நவம்பர் தேர்வுக்கும் இதை பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நவ.15, 16-ம் தேதிகளில் நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் (தாள்-1 & 2) புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அரசாணையின்படி பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பரில் நடந்த டெட் தேர்வுகளை 4.23 லட்சம் பேர் எழுதியுள்ளனர். 5 சதவீத மதிப்பெண் குறைப்பு அரசாணை, அந்த டெட் தேர்வில் இருந்தே அமல்படுத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவித்துள்ளது. இதனால், டெட் தேர்வு முடிவு ஓரிருநாளில் வெளியாகக் கூடும்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.