WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 17, 2026

தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடைவுத் திறன் ஆய்வு: பிப்​.18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

 



தமிழகத்​தில் தொடக்​கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்​களின் அடிப்​படைக் கற்​றல் திறனை சோதனை​யிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18, 20-ம் தேதி​களில் நடை​பெறுகிறது.

இது தொடர்​பாக தொடக்​கக் கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: 2024-25-ம் கல்​வி​யாண்​டில் அரசு, அரசு உதவி​பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் தமிழ், ஆங்​கிலம் வாசிப்​பு, கணிதத் திறன், கற்​றல் அடைவு​கள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்​வித் துறை அறி​வித்​தது.




அதன்​படி, நடப்பு கல்​வி​யாண்​டில் 14 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்ளிகள் 100 நாட்​கள் சவாலுக்கு தயார் நிலை​யில் உள்​ள​தாக முன்​மொழியப்​பட்​டுள்​ளது. இம்மாதம் 3-வது வாரத்​தில் 100 நாள்​கள் சவால் மதிப்​பீட்டு ஆய்வு நடத்​தப்பட உள்​ளது.

அதன்​படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வரும் 18-ம் தேதி​யும், 4, 5-ம் வகுப்பு மாணவர்​களுக்கு 20-ம் தேதி​யும் தமிழ், ஆங்​கிலம், கணிதம் ஆகிய பாடங்​களில் அடிப்​படைத் திறன்​களை மதிப்​பீடு செய்ய வேண்​டும்.

ஒரு வகுப்​புக்கு குறைந்​த​பட்​சம் 5 மாணவர்​களிடம் இந்த கற்​றல் அடைவுத் திறன் சோதிக்​கப்பட வேண்​டும். இந்த தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்​களுக்​கும் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. அலு​வலர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், பள்ளி மேலாண்​மைக் குழு பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட உள்​ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.