WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 10, 2026

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகத்தில் தொடங்கியது.

 

பிளஸ் 2 மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்வு தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது. மாணவ, மாணவி​கள் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 2 முதல் ஏப்.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இறு​திக்​கட்ட பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இதற்​கிடையே, ‘பொதுத் தேர்வு எழுத உள்ள 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்​வு​கள் பிப்​. 9 முதல் 14-ம் தேதி வரை நடத்​தப்​படும். மாநிலம் முழு​வதும் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் சுமார் 5 லட்​சம் மாணவர்​கள் இந்தத் தேர்​வில் பங்​கேற்​கின்​றனர்’ என்று தேர்​வுத்துறை அறி​வித்​திருந்​தது.

அதன்​படி, பிளஸ் 2 வகுப்​புக்​கான செய்​முறைத் தேர்வு நேற்று தொடங்​கியது. ஒரு சுற்​றுக்கு அதி​கபட்​சம் 25 முதல் 30 மாணவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சென்னை நந்​தனம் அரசு மாதிரி மேல்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற செய்​முறைத் தேர்வை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பார்​வை​யிட்டார்.

செய்​முறைத் தேர்வு மதிப்​பெண்​களை, பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் மூலம் பிப்​.23-க்​குள்​ உதவி இயக்​குநர்​ அலு​வல​கத்​தில்​ ஒப்​படைக்​குமாறு தேர்​வுத்​ துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.