2025-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1, கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அக்டோபர் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகிய நிலையில், டிசம்பர் 5 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தற்போது காலிப்பணியிடங்கள், இனச்சுழற்சி முறை ஆகியவற்றுக்கு ஏற்ப தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி பயிற்சியாளர் கிரேடு - I, உடற்கல்வி இயக்குநர் கிரேடு- I ஆகிய 14 பாடப்பிரிவுகளில் சான்றிதழ் சரிபார்பிற்கு பின்பு தேர்வானவர்களின் பட்டியல் பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
டிஆர்பி முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2025 தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் - பதிவிறக்கம் செய்வது எப்படி?
படி 1 : https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் முகப்பு பக்கத்தில் What's New என்ற இடத்தில் பட்டியலுக்கான நேரடி லிங்க் இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அல்லது Notification என்ற இடத்திலும் பட்டியலுக்கான லிங்கை பெறலாம்.
படி 4 : அதில் பாடவாரியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் (Provisional Selection List) இடம்பெற்று இருக்கும்.
படி 5 : அதில் உங்களில் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு PDF பக்கம் திறக்கும். அதில் விண்ணப்ப எண், பதிவு எண், பெயர், பிறந்த தேதி, வகுப்பு மற்றும் மதிப்பெண்களின் விவரம் இடம்பெற்று இருக்கும்.
படி 6 : அதில் உங்களின் பதிவு எண் கொண்டு நீங்கள் தேர்வாகியுள்ளீர்களா என்று அறிந்துகொள்ளலாம்.
பணி நியமன ஆணை எப்போது?
சான்றிதழ் சரிபார்பின்போது சமர்பிக்கப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு, இனசுழற்சி முறை, அறிவிக்கை மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பதவிகளில் தேர்வாகியுள்ளவர்களுக்கான பணி நியமன ஆணைகள் அந்தந்த துறைகளில் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிப் பெறாதவர்கள் பட்டியல்
அதே போன்று, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தகுதிப்பெறாதவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். எதற்காக நிராகரிக்கப்பட்டனர் என்ற காரணமும் பட்டிலில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் முதல் இடம்பெற்றவர்கள்
- தமிழ் - ரமேஷ்.எம்
- ஆங்கிலம் - ஐஸ்வர்யா.கே
- கணிதம் - வர்ணா.எஸ்.எஸ்
- இயற்பியல் - ஸ்ரீ ஜனனி.எஸ்
- வேதியியல் - காமாட்சி.ஜி
- தாவரவியல் - நித்ய கல்யாணி.எல்
- விலங்கியல் - ஸ்ரீவித்யா.பி
- வணிகம் - ஜமுனா.டி
- பொருளாதாரம் - மகாராஜன்.கே
- வரலாறு - வடிவேல்.கே
- புவியியல் - பிரபாஹரன்.சி
- அரசியல் அறிவியல் - பாண்டீஸ்வரி.எஸ்
- கணினி பயிற்சியாளர் கிரேடு 1 - திவ்யா.டி
- உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 - நிஷாந்த்.எஸ்பி
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிகளுக்கு தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நவம்பர் 27-ம் தேதி வெளியானது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 5, 6, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.