WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 1, 2026

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

 

இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். தமிழகம் முழு​வதுள்ள 7,688 தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணமின்றி இலவச​மாகப் படிக்​கலாம்.

தமிழகத்​தில் 2013-ல் அமல்​படுத்​தப்​பட்ட இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை சுமார் 5.7 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர். வரும் கல்​வி​யாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி விண்​ணப்​பப் பதிவு ஏப்​.20-ம் தேதி தொடங்​கியது. கடந்த 10 நாட்​களில் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ள​னர்.

மே 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்​ள​தால், விருப்​ப​முள்​ளவர்​கள் https://rteadmission.tnschools.gov.in/ என்ற இணை​யதளம் வழி​யாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதி​கபட்​சம் தங்​கள் இருப்​பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்​ளி​களில் விண்ணப்பிக்​கலாம். பள்​ளி​யில் நிர்​ண​யித்த இடங்​களை​விட அதிக விண்​ணப்​பங்​கள் வந்​தால் குலுக்​கல் முறை​யில் மாணவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள் என்​று துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.