WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 18, 2026

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல: மத்திய கல்வி அமைச்சகம்.

 

‘மாணவா்களின் விடைத்தாள்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எண்ம முறையில் (ஆன்-ஸ்கிரீன் மாா்க்கிங்) மதிப்பிடுவது புதிதல்ல’ என மத்திய கல்வி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சிபிஎஸ்இ நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியாகின. 17.68 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்தத் தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்தனா். ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் 3 சதவீதம் குறைந்த நிலையில், இதுதொடா்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

விடைத்தாள்களை பிடிஎஃப் வடிவில் ஸ்கேன் செய்து கணினி திரையிடல் மூலம் (ஆன்-ஸ்கிரீனிங் மாா்க்கிங்) ஆசிரியா்கள் மதிப்பிடுவதே மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் என பெற்றோா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய கல்வி அமைச்சக செயலா் சஞ்சய் குமாா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவதன்மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய முடியும். சா்வதேச அளவில் பின்பற்றப்படும் இந்த மதிப்பீட்டு முறை சிபிஎஸ்இ-க்கு புதிதல்ல.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக எண்ம மதிப்பீட்டு முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்தது. ஆனால், போதிய எண்ம உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அது நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்பு, சிபிஎஸ்இ அமைப்பின் பிராந்திய அலுவலகங்களின் புவியியல் வரம்புக்குள் மட்டுமே விடைத்தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்றது. எண்ம மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்ததன் காரணமாக தற்போது அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்றடுக்கு பாதுகாப்புடன் மதிப்பீடு: நிகழாண்டு 12-ஆம் பொதுத் தோ்வெழுதிய மாணவா்களின் 98 லட்சம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. மூன்றடுக்கு பாதுகாப்புடன் மிகவும் கவனமாக இந்தப் பணிகள் நடைபெற்றன.

லேசான மை கொண்ட பேனாக்களில் எழுதப்பட்ட சில விடைத்தாள்களை பலமுறை ஸ்கேன் செய்தும் தெளிவாக இல்லை. இதுபோன்ற 13,000 விடைத்தாள்களை ஆசிரியா்கள் நேரடியாகவே மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கியுள்ளனா்.

எந்தவொரு மாணவரும் தாங்கள் சிறப்பாக தோ்வெழுதியும் குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டோம் என எண்ணக் கூடாது என்பதை உறுதிபடுத்த கடுமையாக உழைத்துள்ளோம்.

மாணவா்களின் மன நலனே முக்கியம்: ரூ.100 கட்டணம் செலுத்தி தங்களின் விடைத் தாள்களை மாணவா்கள் பாா்த்துக்கொள்ளலாம். முன்பு இந்தக் கட்டணத் தொகை ரூ.700-ஆக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் சரிபாா்ப்பு அல்லது மறுமதிப்பீடு செய்ய முன்பு கட்டணத் தொகையாக ரூ.500 நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ரூ.100-ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விடையை மறுசரிபாா்ப்பு செய்ய ரூ.25 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் மனநலனுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். மறுமதிப்பீட்டில் ஒரு மாணவரின் மதிப்பெண்கள் அதிகரித்தால் அவா் செலுத்திய கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்றாா்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.