பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவதை உச்ச நீதிமன்றம் கட்டாய மாக்கியது. இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதையொட்டி நாளை (ஜூன் 8) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மாலை 6.30 முதல் 8 மணி வரை இணையவழி பயிற்சி நடைபெறும். இதை தேர்வெழுதும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.