தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைப் பெற பள்ளிக்கல்வித்துறை இணையவழியில் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகப் பள்ளிக்கல்விக்கான 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025' அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை வடிவமைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்களின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளது.
இப்புதிய பாடத்திட்டங்களை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் https://tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக., 20ல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புவோர், அதே இணையதளத்தில் உள்ள இணையவழிப் படிவத்தை பூர்த்தி செய்து, தங்களின் சுய விவரங்களுடன் வரும் ஆக., 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.