கல்வி உதவித் தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் மாவட்டம்தோறும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டு கிடைக்கும்.
நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவ.21-ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு 15ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது மாணவர்கள் நலன் கருதி கால அவகாசம் அக்.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.