WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 15, 2026

‘டெட்’ சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

 

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு டெட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள்-1-ஐ 59 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள்-2-ஐ 1.61 லட்சம் பேரும் எழுதினர். டெட் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆசிரியர்களுக்கு பணிக்காலத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில், சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தச் சூழலில் கடந்த 1-ம் தேதி இடைக்கால தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.