யு.ஜி.சி., 'நெட்' தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், பி.எச்.டி., என்ற முனைவர் படிப்பில் சேரவும், யு.ஜி.சி., நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
தேசிய தேர்வுகள் முகமை சார்பில், ஆண்டுக்கு இரண்டு முறை யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், டிசம்பர் மாத நெட் தேர்வு அறிவிப்பு, இம்மாதம் 8ல் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. டிசம்பர் 14 முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 14 முதல் 18 வரையிலும், டிச., 21ம் தேதியும் யு.ஜி.சி., நெட் தேர்வு நடக்கும் என, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு மைய விபரம் நவ., 23ம் தேதி வெளியிடப்படும், ஹால் டிக்கெட் டிச., 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.