தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான, 'நிப்ட்' நுழைவுத்தேர்வு, அடுத்தாண்டு ஜனவரி 10ல் நடக்கும்' என, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மத்திய ஜவுளி துறையின் கீழ், ஆடை வடிவமைப்பு தொழில் படிப்புக்காக, தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில், பேஷன் தொழில்நுட்பம் சார்ந்து இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி., வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை, நிப்ட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடக்கிறது.
வரும், 2027 - 28ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நிப்ட் நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி நடக்கிறது. இதற்கு, https://nta.ac.in என்ற இணையதளம் வழியாக, நவம்பர் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள, நவ., 22 முதல் 25 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும், தேர்வுக்கான அனுமதி சீட்டு, ஜன., 4ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.