WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label கௌரவ விரிவுரையாளர் கோரிக்கை. Show all posts
Showing posts with label கௌரவ விரிவுரையாளர் கோரிக்கை. Show all posts

Monday, January 18, 2016

கௌரவ விரிவுரையாளர்களை நசுக்க பார்க்கும் கல்லூரி நிர்வாகம்

திருவள்ளுவர் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி,திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி,விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலை கழக வினாத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதிப் பெற செட்,நெட்,பி.எச்.டி  ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .மேலும் தனியார் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்கப் பட்டுள்ளது.அதாவது 2009 ஆண்டுக்குள் M.Phil தேர்ச்சிப் பெற்றிருந்தால்  போதும் .மேலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான  approval list  கல்லூரி நிர்வாகத்தால் பல்கலை கழகத்திற்கு அனுப்ப படுவதில்லை.இதனால் தான் 2009 க்கு முன்பு M.Phil முடித்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு  வினாத்தாள் திருத்த அனுமதி வழங்கப்படவில்லை என திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் கலைக்கல்லூரி, கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் பல்கலை கழகத்தேர்வு நடத்தும் போது விதிமுறைகளை பின்பற்றாமல் கௌரவ விரிவுரையாளர்களை hall superdent பணிக்கு அனுமதிக்கிறது.ஆனால் அந்த வினாத்தாள் திருத்த எங்களுக்கு அனுமதி மறுப்பது சட்ட விரோதமானது என  m.phil முடித்த விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.