WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 29, 2014

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு

சிவகங்கை :
சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர். சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர். அதன்படி, மாறுதல் கோரி விண்ணப்பித்த, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்திற்கு காலை 9 மணிக்கெல்லாம் வருகை தந்தனர். தொடர்ந்து, மாலை 5 மணி வரை, அடிப்படை வசதிகளே இல்லாத, மையத்தில் எட்டு மணி நேரமாக காத்திருந்தனர். மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டரை பயன்படுத்தி, கலந்தாய்வு நடத்த கல்வித்துறை ஆலோசனை வழங்கியது. ஆனால், சிவகங்கையில், மின்வெட்டு ஏற்பட்டபோதும், ஜெனரேட்டர் வசதி பகல் 12 மணி வரை செய்யப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் வகுப்பு அறையில், கோடை வெயில் புழுக்கத்தில் அமர்ந்திருந்தனர். புகார்: நேற்று மாலை 5 மணி வரை, காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியில், சி.இ.ஓ.,விடம் முறையிட்டனர். அப்போது, "ஆன்லைனில்', காலி இடங்கள் விபரங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை என, கூறினர். இதனால், நேற்று மாலை வரை காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியுடன் காணப்பட்டனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில், இருந்து இன்னும் ஆன்லைனில், காலியிட விபரம் வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் , இப்பிரச்னை உள்ளது. கலந்தாய்வு நடத்தி, "டிரான்ஸ்பர்' உத்தரவு வழங்க, நாங்கள் தயாராக தான் உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.