WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 30, 2014

டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு (கல்விக்குயில்)

டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ராஜகுமார். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- நான், எம்.எஸ்சி., எம்.எட் முடித்துள்ளேன். கடந்த 18-8-2013 அன்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன். (கல்விக்குயில்)
இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தேனி நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 24-1-2014 அன்று நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டேன்.
( கல்விக்குயில்) )
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.(கல்விக்குயில்)
பாதிப்பு:
ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும் இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். ( கல்விக்குயில்) )
அப்போது அவர்கள்,சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
(கல்விக்குயில்)
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால் தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
(கல்விக்குயில்)
எனவே, பணி நியமன உத்தரவு வழங்க உத்தரவிட வேண்டும். எனக் காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.(கல்விக்குயில்)
நோட்டீசு:
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
( கல்விக்குயில்)
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.