WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 19, 2014

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்
பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் நிறுவனராக இருப்பவர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–


காலிப்பணியிடம்



தமிழக அரசு பணியில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை கொண்டு நிரப்பவேண்டிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.


இந்தப் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


உயர் நிலைக்குழு


இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.விஜேந்திரன், ஜி.சரவணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தமிழக அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது.



அதில், ‘‘அரசின் அனைத்துத் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில், அந்தப் பிரிவினர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக உயர்நிலைக்குழு ஒன்றினை கடந்த 2012–ம் ஆண்டு தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ததும், அந்த பணியிடங்களை நிரப்ப தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.


நிரப்பவேண்டும்

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பின்னடைவுப் காலிப் பணியிடங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட உயர் நிலைக்குழு அறிக்கையை அரசு பெற்றவுடன் அது தொடர்பான தகுந்த உத்தரவினை பிறப்பித்து காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.