WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 12, 2014

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: மங்கள்யான் இலக்கை எட்ட இன்னும் 75 நாள்!

பெங்களூர், ஜூலை 12-
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு
மையம் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை ஏவியது.
கடந்த 8 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் இன்னும் 75 நாட்கள் மட்டும் தான் பூர்த்தி செய்யவேண்டும்.
செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த விண்கலம் 525 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளது.
தற்போது பூமியிலிருந்து அனுப்படும் ரேடியோ சிக்னல்கள் விண்கலத்தை சென்றடைய 15 நிமிடங்கள் ஆவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 11ந் தேதி விண்கலத்தின் போக்கில் இரண்டாவது முறையாக திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம் விண்கலம் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டது. 450 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.