WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 14, 2014

மாணவர்கள் எதிர்கால விஞ்ஞானிகளாக வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி பேச்சு!

கோவை :
''நம் நாட்டில் விஞ்ஞானிகள் குறைவாகவே உள்ளனர்; எனவே, மாணவர்கள்
அனைவரும் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
லீட் இந்தியா 2020 மற்றும் அவினாசிலிங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் 'இந்தியா 2020' எனும் அறிவியல் கண்காட்சி, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் கடந்த இரு நாட்கள் நடந்தது.
நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் லீட் இந்தியா 2020 தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
உள்துறை அமைச்சக முதன்மை பாதுகாப்பு ஆலேசாகர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். விஞ்ஞானிகளாகும் ஆர்வத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண் டும். ஏனெனில், நம் நாட்டில் விஞ்ஞானிகள் குறைவாகவே உள்ளனர்.
பள்ளிகளில் இதுபோன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.மாணவர்களும் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆசிரியர்களை ஆர்வமுடன் நாடவேண்டும்.
நான் விஞ்ஞானியாக உருவாக எனது ஆசிரியரே காரணம். எனவே, நம்முடைய ஆசிரியரை கட்டாயம் வணங்க வேண்டும். கற்கும் கல்வியே வாழ்க்கையை உயர்த்தும். மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொண்டால் வெற்றி நம்மை தேடிவரும்.இவ்வாறு, அவர் பேசினார். லீட் இந்தியா 2020 செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, லீட் இந்தியா 2020 மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.