WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 29, 2014

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா?

'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என,
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும், பி.எட்., முடித்த ஆசிரியர்கள் கூடுதல் தகுதி மற்றும் ஊக்கத் தொகை பெறுவதற்கு, எம்.எட்., படிப்பார்கள். இப்படிப்பு தற்போது இக்னோ, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் ஆகிய பல்கலைகளில் மட்டும் உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் இப்படிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர். எம்.எட்., முடித்தால் ரூ.2,500 முதல் 3 ஆயிரம் வரை ஆசிரியருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். மேலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பி.எட்., கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.
எனவே, தொலை நிலைக் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் மதுரை காமராஜ் பல்கலையில், எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் நாக சுப்பிரமணியன் கூறுகையில், 'எம்.எட்., என்பது ஒருசில பி.எட்., கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. அதிக ஆசிரியர்கள் இப்படிப்பை படிக்க தயாராக உள்ளனர். காமராஜ் பல்லையில் மாலைநேர கல்லூரியில் ரெகுலராகவோ அல்லது தொலைநிலைக் கல்வியிலோ இப்படிப்பை துவங்க நடவடிக்கை எடுத்தால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் பெறுவர்,' என்றனர்.
'தொலைநிலைக் கல்வியில் எம்.எட்., துவங்குவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம், அனுமதி கோரப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பல்கலை வட்டாரம் தெரிவித்தன.www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.