WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 20, 2014

தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!!

தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேசிய கல்வி திட்டமிடல் மேலாண்மை பல்கலைக்கழகம் (நியூபா), 2012 - 13ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின், கல்வி முன்னேற்றக் குறியீட்டு தரத்தை, பட்டியலாக வெளியிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் கல்வித்தரம் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், சராசரி குறியீடு மற்றும் தரம் (ரேங்க்) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய அளவில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக, அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கொள்கை விளக்க புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் இடத்தை, லட்சத்தீவுகளும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரியும் பிடித்துள்ளன. தேசிய அளவில், மூன்றாவது இடத்தை, தமிழகம் பிடித்திருந்தாலும், யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களுக்குள், தமிழகம், முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு, புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் 'ரேங்க்' என்ன?
அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகக் கூறப்படும் குஜராத்திற்கு, 18வது இடம் தான் கிடைத்துள்ளது.
'டாப்' 10 மாநிலங்கள்
1. லட்சத்தீவுகள்
2. புதுச்சேரி
3. தமிழகம்
4. சிக்கிம்
5. கர்நாடகா
6. பஞ்சாப்
7. டாமன் மற்றும் டையூ
8. மகாராஷ்டிரா
9. மணிப்பூர்
10. மிசோரம்
கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகக் கூறப்படும் கேரளா, 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு, 23வது இடம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.