WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 20, 2014

ஜனாதிபதியின் பெயரைக்கூட தெரியாத பீகார் ஆசிரியை

மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு ஆசிரிய-
ஆசிரியைகள் பாடத்திட்டங்கள் மட்டுமின்றி பொது அறிவிலும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.ஆனால், பீகாரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதி என்றும், ஸ்மிருதி இரானியை கவர்னர் என்றும் கூறியது கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பங்கேபஜாரி பிளாக்கில் உள்ள தும்ரி ஆரம்பப் பள்ளியில் பணியாற்றிய அனிதா என்ற ஆசிரியை, தனக்கு வீட்டில் அருகில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் கோரி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தார். அவரது பொது அறிவை சோதனை செய்ய விரும்பிய மாவட்ட கலெக்டர், சில கேள்விகளை கேட்டார். அப்போது, பிரதீபா பாட்டீலை ஜனாதிபதி என்றும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானியை பீகார் கவர்னர் என்றும் அந்த ஆசிரியை எழுதியிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர், அவரது பட்டப்படிப்புச் சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். “ஜனாதிபதி பெயரைக்கூட தவறாக எழுதியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இத்தகைய மோசமான அறிவு கொண்ட ஆசிரியையால் பள்ளியில் குழந்தைகளுக்கு எப்படி சரியாக பாடம் நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் கலெக்டர்.

ஆசிரியையின் சான்றிதழ் உண்மையா? போலியா? என்பது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அது போலி எனத் தெரிந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 comments:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.