WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 29, 2014

பணி நியமனக் கலந்தாய்வு பற்றின பத்திரிக்கைச் செய்தி

பத்திரிக்கைச் செய்தி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம் வாயிலாக, நடத்தப்படவுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. 

முதுகலை ஆசிரியர்கள்
(மாவட்டத்திற்குள்) = 30-08-2014

முதுகலை ஆசிரியர்கள்
(வேறு மாவட்டம்)  =  31-08-2014

இடைநிலை ஆசிரியர்கள்
(மாவட்டத்திற்குள்)  = 01-09-2014

இடைநிலை ஆசிரியர்கள்
(வேறு மாவட்டம்) = 02-09-2014

பட்டதாரி ஆசிரியர்கள்
(மாவட்டத்திற்குள்)  =  03-09-2014

பட்டதாரி ஆசிரியர்கள்
(வேறு மாவட்டம்) = 04-09-2014 மற்றும் 05-09-2014


பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

வ.எண் - மாவட்டம் - கலந்தாய்வு நடைபெறும் இடம்
  1. சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
  2. கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
  3. கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
  4. தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
  5. திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
  6. ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
  7. காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  8. கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
  9. கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
  10. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
  11. மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
  12. நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
  13. நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
  14. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
  15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
  16. இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
  17. சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
  18. சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
  19. தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
  20. நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
  21. தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
  22. திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
  23. திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
  24. திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
  25. திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
  26. திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
  27. திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
  28. தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
  29. வேலூர் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
  30. விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
  31. விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
  32. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

13 comments:

  1. இனிய காலை வணக்கம் Kk நண்பர்களே!

    அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    Thanks to kalvikkuyil for your valuable information update here every hour/day.continues your process we are stay with here.

    ReplyDelete
    Replies
    1. HI KK FRIENDS IMPORTANT NEWS ABOUT COUNSELING SHARE TO YOU IF SOME BODY ALREADY KNOWING ABOUT THIS;

      JUST A MINUTE I HAVE MAKE CALL TO DIST CEO OFFICE I WILL ASKING SOME QUESTIONS ABOUT COUNSELING
      THE CEO OFFICER REPLY FOLLOWING ANSWER;
      1.THE CANDIDATE ATTEND COUNSELING AT DIST CEO (WHO S ALREADY MENTION THE HALL TICKET PERMANENT ADDRESS )

      2. ONE SET OF XEROX COPY WITH ATTESTED AND ORIGINAL CERTIFICATE

      3. INDIVIDUAL QUERY PRINT OUT ONE COPY

      BE READY ALL THE BEST TO ALL KK FRIENDS

      Delete
  2. Dear kalvikukkil admin sir,Thank u so much for valuable info.I had a doubt pls clarify sir.My address trichy(hall ticket),exam & cv in namakkal.where to go tomorrow?

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம். what's this ? anybody pls reply.

    ReplyDelete
  4. Good Morning KK Friends.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும் .
    எனவே தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை INDUVIDUAL QUARRY பகுதியில் பதிந்து தங்களுடைய மதிப்பெண் அடங்கிய தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வுக்கு எடுத்திச்செல்லவும்.அதனுடன் ஹால்டிக்கட்,கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்துச்செல்லவும். God Bless All selected Teachers.அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. good morning to all kalvikuyyil frnds.....vinayagar sathurthi wishes to all my frnds and kalvikuyyil admin

    ReplyDelete
  6. Good morning to all newly selected teachers, god may give confidence and trust to have successesful career and to try to get good teachers award and add to pride ,proud to your parents,schools and society
    new born teacher - K.Ramesh,tvm, thank u to all

    ReplyDelete
  7. Thank u Mr.Ramesh ,need attested copies, how many set of xerox needed?

    ReplyDelete
    Replies
    1. Somebody told no need attested copies. But You keep 3 set xerox copies.Maybe it is useful to u.

      Delete
  8. pg english ku trichy-dt la vacant therintha solunga friends pls.

    ReplyDelete
  9. விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்:
    தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
    எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thanks with Warm Regards…..
    Anandan S (TMW)

    ReplyDelete
  11. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.