WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 10, 2026

யுஜிசி நெட் மறுதேர்வர்கள் கவனத்துக்கு: என்டிஏ அறிவுறுத்தல்!

 

தில்லியில் யுஜிசி நெட் மறுதேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) செவ்வாய்க்கிழமை (செப். 8) வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. 87 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் 84 பாடங்களுக்கு மட்டுமே வெளியாகின. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அவற்றுக்கான மறுதேர்வு வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என என்டிஏ அறிவித்திருந்தது.

இந்தத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் தேர்வு எழுதுவோருக்கு வெளியிடப்பட்டுள்ள சில வழிகாட்டு நெறிமுறைகள்:

“18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு, செப்டம்பர் 11 முதல் 13 வரை தில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதனால், செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நகரில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால், சாலைப் போக்குவரத்து வழக்கத்தை விட தாமதமாகலாம்.

எனவே, உங்கள் பயண வழியை இன்றே சரிபார்த்துக் கொண்டு, நாளை தேர்வு மையத்துக்குச் சென்றடைய கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.