WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 10, 2026

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 31,510 பேருக்கு 2017-23 காலகட்டத்தில் தாமதமாக கல்வி உதவித்தொகை.

 

‘கடந்த 2017-23 கால​கட்​டத்​தில் 31,510 எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு கால​தாமத​மாக கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது’ என இந்​திய தணிக்கை தலை​வரின் அறிக்​கை​யில் குற்​றம்​ சாட்​டப்​பட்​டுள்​ளது.

எஸ்​சி, எஸ்​டி, எஸ்​சி-மதம் மாறிய கிறிஸ்தவ மாண​வர்​களுக்​கான கல்வி உதவித்​தொகை திட்​டங்கள் தொடர்​பாக, இந்​திய தணிக்கை தலை​வரின் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களின் கல்​வியறிவு விகிதத்​தை​யும் கல்​வித்​தரத்​தை​யும் உயர்த்​தும் நோக்​கில் அவர்​களுக்கு மத்​தி​ய-​மாநில அரசு சார்​பில் பல்​வேறு கல்வி உதவித்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

இதுகுறித்து போதிய விழிப்​புணர்வு இல்​லாத​தால் 2019-20 கால​கட்டத்​தில் குறிப்​பிட்ட 8 மாவட்​டங்​களில் எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்​கான ப்ரீ-மெட்​ரிக், போஸ்ட்​-மெட்​ரிக் கல்வி உதவித்​தொகை திட்​டங்​கள் சராசரி​யாக 46 சதவீதம் மற்​றும் 39 சதவீத பள்​ளி​களைச் சென்​றடைய​வில்​லை.

கடந்த 2017-23 கால​கட்​டத்​தில் குறிப்​பிட்ட கல்வி நிறு​வனங்​களில் 36,510 எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு ரூ.7.28 கோடி கல்வி உதவித்​தொகை ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை கால​தாமத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதே கால​கட்​டத்​தில் வங்​கிக்​கணக்கு முடக்​கம், பரி​வர்த்​தனை நிறுத்​தம், வங்​கிக்​கணக்கு இல்லை போன்ற காரணங்​களால் 3,530 பேருக்கு ரூ.161 கோடி கல்வி உதவித்​தொகை வங்​கிக்​கணக்​கு​களில் செலுத்​தப்பட முடி​யாமல் திருப்பி அனுப்​பப்​பட்​டது.

அதே​போல், 2023-25-ம் ஆண்​டுகளில் மத்​திய கல்வி உதவித்​தொகை பெற தகு​தி​யில்​லாத எஸ்சி மதம் மாறிய கிறிஸ்தவ மாண​வர்​கள் 2,576 பேருக்கு மத்​திய அரசின்பங்​கான 60 சதவீத உதவித்​தொகை வழங்​கப்​பட்​ட​தால் ரூ.3.64 கோடி தவறாக செலுத்த நேரிட்​டது.

தணிக்கை குழு பரிந்​துரைகள்

எஸ்​சி, எஸ்டி மாண​வர்​களுக்கு கல்வி உதவித்​தொகையை அனு​ம​திக்​கும் முன், கல்வி நிறு​வனங்​களில் நிர்​வாக ஒதுக்​கீட்​டின் கீழ் மாண​வர் சேர்க்கை வெளிப்​படைத் தன்​மை​யுடன் மேற்​கொள்​ளப்​படு​வதை அரசு உறுதி செய்யவேண்​டும்.

தகு​தி​யுள்ள மாண​வர்​களுக்கு மட்​டுமே கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படு​வதை உறு​திப்​படுத்த அவர்​களின் விண்​ணப்​பங்​களை அரசு ஆராய வேண்​டும். கல்வி உதவித்​தொகை அந்​தந்த கல்வி ஆண்​டிலேயே வழங்​கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.