1839 ஆக., 19ல் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175வது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
முதல் படம்:
1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. இதன் பின் புகைப்படத்துறை பல்வேறு நிலைகளில் முன்னேறியது. பல அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
வரலாற்றில்...:
20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற "டேங்க் மேன்', வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த "சிறுமியின் புகைப்படம்', 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த "குழந்தையின் புகைப்படம்' ஆகியவை குறிப்பிடப்படுகிறது.
நன்மை மட்டும் :
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒரே ஒரு 'க்ளிக்'; ஓராயிரம் 'லைக்!':
தூரிகையை எடுக்காமல் தீட்டப்படும் ஓவியம்; நான்கு கட்டங்களில் சொல்லக்கூடிய காவியம்; ஒற்றை 'பளிச்'சில், ஒரு சரித்திர பதிவு. நிஜத்தை நிழலாக்கி, நிழலுக்கு உயிர் கொடுக்கும், விரலின் வித்தைநமது எண்ணத்தின் ஒருமைப்பாடு, கலையாக பிரதிபலிக்கிறது. அந்தக் கலையில் ஒன்று தான், ஒரு கண்ணை மறைத்து 'ஆங்கிள்' பார்க்கும் புகைப்படத் துறை. ஓராயிரம் கவிதைகள், ஒரு பக்க செய்திகள் ஆகியவற்றை விட, நான்கு கட்டங்களுக்குள் அடங்கும் ஒரு புகைப்படம் பல தகவல்களை சொல்லி விடும்.போபால் நகர் சம்பவத்தின் கொடூரத்தை, இன்று வரை, கண்ணை மூடாமல் இறந்த சிறுவனின் புகைப்படம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம், கடந்த கால வரலாறுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் கூற்றையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.புகைப்படக்காரர்களின் சிறப்பையும், இவர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ம் தேதி, உலக புகைப்பட நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுவேரே என்பவர், 'டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார்.கடந்த 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி, பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு, 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு, பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஏனென்றால், இவர்கள் கனவுகளை தின்று திறமை வளர்ப்பவர்கள்.இன்று உலக புகைப்பட தினம் : ஆகஸ்ட் 19ம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த தினம் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளம் மற்றும் வர்த்தக ரீதியாக புகைப்பட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1839ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதியன்று காப்புரிமை பெறாமல், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டது.அதன் நினைவாகவே, ஆண்டுதோறும் புகைப்படதினம் கொண்டாடப்படுகிறது. முதல் வணிக ரீதியிலான புகைப்படம், 90 ஆண்டுகளுக்கு முன்பு, 110 மற்றும் 120 எம்.எம்., பிலிம் மூலம் எடுக்கப்பட்டது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 'டிஜிட்டல் கேமரா' பிரபலமானது.தற்போது 'ஸ்மார்ட் போன்' இருந்தாலே, ஒருவர் புகைப்பட நிபுணர் ஆகிவிடுகிறார் என்ற நிலை வந்து விட்டது.
புகைப்பட கலையின் வரலாறு :
மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது புகைப்படக்கலை. இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்பட கலையின் தாக்கம் மிக அதிகம். இந்த பூமியையே செயற்கைக்கோள் என்னும் பெரிய கேமரா தினமும் படம் பிடித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவத் துறையில் மனிதனின் உடலினுள் கூட சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா. ஆனால், புகைப்படக் கலையின் வரலாறு 1000 ஆண்டுகள் பழமை உடையது. கி.மு., 300 களில் அரிஸ்டாட்டில் எனும் அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியே புகைப்படத்திற்கு ஆணிவேர்.கேமரா என்னும் சொல் 'இருட்டு அறை' என்று லத்தின் மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய கேமரா மூலம் உருவங்களின் பிம்பத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தினர். பின், 16ம் நூற்றாண்டில் தான் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1700ம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. நைஸ் போர் என்பவரால் 1826ல் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. கடந்த 1850ல் புகைப்படக்கலை இந்தியாவிற்கு வந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.