அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு
விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்.,26 ல் நடத்த உள்ளது. இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் எம்.இ., அல்லது எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு எம்.ஏ., அல்லது எம்.எஸ்.சி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 55 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1 ல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.,20) முதல் வினியோகிக்கப்படுகிறது. ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.300, மற்ற பிரிவினர் ரூ.600 யை பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி.,யில் சலானாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.,5 மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.